மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வானிலை! சென்னைக்கு அக். 25ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு!

வானிலை நிலவரப்படி, சென்னைக்கு அக். 25ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது பற்றி..

கனமழைக்கு வாய்ப்பு

கனமழைக்கு வாய்ப்பு

Published On :21 அக்டோபர் 2026, 4:31 pm IST

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, சென்னைக்கு அக். 25ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மண்டல வானிலை ஆய்வு மை இயக்குநர் துரை செய்தியாளர்களிடம் பேசுகையில், வங்கக் கடலில் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறும் வாய்ப்பு குறைவு. இதன் காரணமாக அக். 26 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு நோக்கி நகர்ந்தால் சென்னையில் அக்.25 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது.

ஆனால், அக். 23ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை 3 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த நாள்களில் அதி கனமழைக்கு வாய்ப்பில்லை.

அதே வேளையில், இன்று காலை தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருக்கிறது. இது அடுத்த 2 மூன்று நாள்களுக்கு அதே பகுதியில் நிலவ வாய்ப்புள்ளது. எனவே தான் தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் அதிக கனமழையும் நாளை ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழையும் பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதால், பெரும்பாலான தென் தமிழக மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இது சிவப்பு எச்சரிக்கையாக மாறுமா என்றால், அதற்கான வாய்ப்பு குறைவுதான், ஏனென்றால், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலு குறைந்து உள்ளது. அதுபோல சென்னையில் அடுத்த 3 நாள்களுக்கு மிதமான மழையே பெய்யக் கூடும். அக். 25ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. இன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு நோக்கி நகர்வதன் எதிரொலியாக சென்னைக்கு கனமழை பெய்யலாம். நாளை மிதமான மழைக்கே வாய்ப்புள்ளது என்றும் தென் மண்டல வானிலை ஆய்வு மை இயக்குநர் துரை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.