கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஒர்னாப் ஓய்வதற்குள் அடுத்த புயல் எச்சரிக்கை? 48 மணி நேரத்தில் உருவாகிறது! சென்னையை குறிவைக்கிறதா?

ஒர்னாப் ஓய்வதற்குள் அடுத்த புயல் எச்சரிக்கை வெளியானது, 48 மணி நேரத்தில் உருவாக வாய்ப்பு பற்றி..

அடுத்த புயல்

அடுத்த புயல் - imd

Published On :28 அக்டோபர் 2026, 3:56 pm IST

வங்கக் கடலில் உருவான ஒர்னாப் புயல், ஆந்திரத்தில் அமலாபுரம் அருகே கரையைக் கடந்து தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவிக் கொண்டிருக்கும் அதேவேளையில், அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் தகவலில், சுமார் 5.8 கி.மீ. உயரம் வரை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே பகுதிகளில் உருவாக்கக் கூடும் என்று தெரிவக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் சின்னம் வட தமிழகத்தை நோக்கி நகர்ந்தால், சென்னைக்கு கன மழை மற்றும் புயல் ஆபத்தும் ஏற்படலாம் என்று தெரிகிறது.

மேலும், வானிலை நிலவரங்களை கணித்து ஊடகங்களில் வெளியிட்டு வரும் டெல்டா வெதர்மேன் என்று அறியப்படும் ஹேமச்சந்தர் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் இது பற்றி வெளியிட்டிருக்கிறார்.

அடுத்த புயல் எப்போது, எங்கே கரையை கடக்கும் வாய்ப்புள்ளது, மழை நிலவரம் என பல்வேறு விவரங்களையும் ஹேமச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.

அவர் தெரிவித்திருப்பதாவது, தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும்.

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும், இது அடுத்த 48 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும். இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நவ. 1ஆம் தேதி வட தமிழகம் - தெற்கு ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.