தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

அடுத்த 3 மணி நேரத்தில் உருவாகிறது முரசு புயல்! தீவிர புயலாக வலுவடையும்!

அடுத்த 3 மணி நேரத்தில் முரசு புயல் உருவாகவுள்ளது குறித்து...

cyclone

அடுத்த 3 மணி நேரத்தில் உருவாகிறது முரசு புயல்! தீவிர புயலாக வலுவடையும்! - படம்: வானிலை ஆய்வு மையம்

Published On :1 நவம்பர் 2026, 12:41 pm IST

அடுத்த 3 மணி நேரத்தில் முரசு புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்), மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடலில் சனிக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது.

இந்தப் புயல் சின்னம் மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து, இந்தப் புயல் சின்னம் இன்று (நவ. 1) பிற்பகலில் புயலாக வலுப்பெறுகிறது.

இது தொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் (காலை 9 மணி நிலவரப்படி) மணிக்கு 23 கி.மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

இந்தப் புயல் சின்னம் சென்னைக்கு (தமிழ்நாடு) கிழக்கே - தென்கிழக்கே சுமார் 700 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தெற்கே - தென்கிழக்கே 770 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தென்கிழக்கே 770 கி.மீ. தொலைவிலும், ஒங்கோலுக்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கே - தென்கிழக்கே 810 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இந்தப் புயல் சின்னம் தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 6 மணி நேரத்தில் (பிற்பகல் 3 மணிக்கு மேல்) தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு - மத்திய வங்கக் கடலில் புயலாக வலுவடையும்.

நாளை (நவ. 2) மேற்கு - மத்திய வங்கக் கடலில் தீவிர புயலாக மேலும் வலுவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் இந்தப் புயல், நவ. 3 ஆம் தேதி காலை வாக்கில், நெல்லூருக்கும் நரசபூருக்கும் இடையே தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை கடக்கக்கூடும்.

அப்போது, மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 120 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

The India Meteorological Department has stated that there is a possibility of Cyclone Murasu forming within the next 3 hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.