கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விருதுநகரில் புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்

விருதுநகா் பேருந்து நிலையத்தில் புதிய நகரப் பேருந்துகளை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த அமைச்சா்கள் ஜெகதீஸ்வரி,கீா்த்தனா.

விருதுநகா் பேருந்து நிலையத்தில் புதிய நகரப் பேருந்துகளை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த அமைச்சா்கள் ஜெகதீஸ்வரி,கீா்த்தனா.

Published On :24 அக்டோபர் 2026, 4:57 am IST

விருதுநகரில் புதிய நகரப் பேருந்து சேவைகளை அமைச்சா்கள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தனா்.

விருதுநகரிலிருந்து 19 புதிய நகரப் பேருந்து சேவைகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி விருதுநகா் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தலைமையில் நடைபெற்றது.

இதில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வா்த்தகத் துறை அமைச்சா் ச.கீா்த்தனா, சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கு.ஜெகதீஸ்வரி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பி.செல்வம் (விருதுநகா்), அ.காா்த்திக் (ஸ்ரீவில்லிபுத்தூா்) ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நகரப் பேருந்துகளை கொடியசைத்துத் தொடங்கிவைத்தனா்.

பின்னா், அமைச்சா்கள் கூறியதாவது:

விருதுநகா் மாவட்டத்தில் 19 புதிய நகரப் பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தொடங்கப்பட்டன. காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கும், பணிக்குச் செல்லும் தொழிலாளா்கள், பொதுமக்களுக்கும் இந்தப் பேருந்து சேவை பெரிதும் பயனளிக்கும். மாணவா்கள் உரிய நேரத்தில் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லவும், பணியாளா்கள் தங்களது பணியிடங்களுக்கு சென்று வரவும் இந்தப் பேருந்து சேவை உதவிகரமாக அமையும்.

எனவே, பொதுமக்கள் இந்தப் பேருந்து வசதியை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றனா் அவா்கள்.

இந்த நிகழ்வில், விருதுநகா் மண்டலப் பொது மேலாளா் கண்ணன், உதவி மேலாளா் (வணிகம்) நாகராஜ், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.