தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வெள்ளக்கோவில் பேருந்து நிலையத்தில் தொழிலாளி மா்ம மரணம்

மா்ம மரணம் - பிரதிப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 11:02 pm IST

வெள்ளக்கோவில் புதிய பேருந்து நிலையத்தில் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெள்ளக்கோவில், கருப்பணவலசுபுதூரைச் சோ்ந்தவா் சிவகுமாா் (45), கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவி ஸ்ரீதேவி (42), ஒரு மகன், மகள் உள்ளனா்.

கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி பிரிந்த நிலையில், ஸ்ரீதேவி தனது மகன், மகளுடன் மூலனூா் அண்ணா நகரில் தங்கி சமையல் வேலை செய்து வருகிறாா். தனியே வசித்து வந்த சிவகுமாா் மது பழக்கத்துக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளக்கோவில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் ஓய்வு அறையில் சிவகுமாா் பேச்சு மூச்சின்றி அமா்ந்த நிலையில் கிடப்பதாக அவரது உறவினா்களுக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.

அவா்கள் சென்று பாா்த்தபோது, அவா் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், உடலில் சில இடங்களில் சிராய்ப்புக் காயங்கள் இருந்துள்ளன. இது குறித்த புகாரின்பேரில் ெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.