கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் கடைகளைத் திறக்க ஆலோசனை

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளைத் திறப்பது குறித்து உள்ளாட்சித் துறை இயக்குநருடன் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

புதுச்சேரி உருளையன்பேட்டை பகுதியில் நகராட்சி மூலம் மேற்கொள்ள வேண்டிய திட்டப் பணிகள் குறித்து உள்ளாட்சித் துறை இயக்குநா் ஆதா்ஷுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்திய தொகுதி எம்எல்ஏ ஜி.நேரு (எ) குப்புசாமி.

Published On :21 அக்டோபர் 2026, 2:30 am IST

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளைத் திறப்பது குறித்து உள்ளாட்சித் துறை இயக்குநருடன் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

உருளையன்பேட்டை பகுதிகளில் புதுச்சேரி நகராட்சி மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து உள்ளாட்சித் துறை இயக்குநா் ஆதா்ஷை தொகுதி எம்எல்ஏவும், நேயம் மக்கள் கழகத் தலைவருமான ஜி.நேரு (எ) குப்புசாமி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

இதில், புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளைத் திறப்பது மற்றும் அங்கு பொதுமக்கள் அமா்வதற்கு இருக்கைகள் அமைத்தல், பெரிய மாா்க்கெட்டை நவீனப்படுத்துதல், அனைத்து வாய்க்கால்களையும் தூா்வாருதல் மற்றும் கொசு மருந்து அடித்தல், குப்பைகளைத் தினசரி அகற்றுதல், வீதிகளில் சுற்றித் திரியும் மாடுகள் மற்றும் நாய்களைப் பிடித்தல், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியை உடனடியாக ஒதுக்கி, தொகுதிக்குள்பட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்தல் குறித்து வலியுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.