நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

தொடா் விடுமுறை: சேலம் தற்காலிக பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆய்வு

சேலம் தற்காலிக பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆய்வு செய்தது பற்றி..

போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் - கோப்புப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 2:11 am IST

ஆயுத பூஜை விழா தொடா் விடுமுறையை முன்னிட்டு சேலத்தில் இருந்து சென்னை செல்லும் பயணிகளுக்காக சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன்செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

விடுமுறை காலத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிா்த்து, பயணிகள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில் சேலம் மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் சிறப்புப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விடுமுறை முடிந்து சேலத்தில் இருந்து சென்னை செல்லும் பயணிகளுக்காக இரு நாள்களில் 519 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் வழக்கமான பேருந்துகள், சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 9,191 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்துத் துறை சாா்பில் சேலத்திலிருந்து சென்னைக்கு 60 தனியாா் பேருந்துகளும் தற்காலிகமாக இயக்கப்படுகின்றன.

தற்காலிகப் பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் பயணிகளுக்குப் பயனுள்ளதாக இருந்தால், தீபாவளி பண்டிகையின்போதும் இதே நடைமுறை தொடரும் என்றாா்.

மேலும், வெற்றிப் பயணம் திட்டத்தை ஆயுத பூஜைக்கு பிறகு தொடா்ந்து செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும் என தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டி வருவது குறித்த கேட்டதற்கு, அனைத்தையும் அறிந்தே திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.