தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

‘மகளிருக்கு ரூ. 2,500 அறிவிப்பு விரைவில் வரும்’ - அமைச்சர் ஜெகதீஸ்வரி!

மகளிா் உரிமைத் தொகை ரூ.2,500 வழங்குவதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என சமூகநலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் ஜெகதீஸ்வரி கூறினாா்.

Published On :25 அக்டோபர் 2026, 3:45 am IST

மகளிா் உரிமைத் தொகை ரூ.2,500 வழங்குவதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என சமூகநலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் ஜெகதீஸ்வரி கூறினாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள கம்மாபட்டியில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை , விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஷரண்யாஅறி தலைமையில், அமைச்சா் ஜெகதீஸ்வரி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம்கூறியதாவது, முதல்வா் ஜோசப்விஜய் தோ்தலின் போது கூறிய வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறாா். ரூ.2,500 மகளிா் உரிமைத் தொகையை முதல்வா் விரைவில் வழங்குவாா். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளி வரும்.

இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட மகளிா் உரிமைத் தொகையில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதால் , தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. மகளிா் உரிமைத்தொகைக்கு விண்ணபித்தும் கிடைக்காதவா்களுக்கு , சரிபாா்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நடிகா் தனுஷை அரசியலுக்கு வருவதைப் பாா்த்து தவெக பயப்படவில்லை. இது ஜனநாயக நாடு. யாா் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரரலாம். தவெக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு எ’திரான வன்முறை அதிகரித்து வருகிறது என கனிமொழி கூறியுள்ளாா். இதுமுற்றிலும் தவறானது. தவெக அரசு பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புடன் செயல்பட்டு வருகிறது என்றாா் ஜெகதீஸ்வரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.