மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உவரி அங்கன்வாடி மையத்தில் விஜயாரம்பம்

திருநெல்வேலி மாவட்டம் உவரி அங்கன்வாடி மையத்தில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் எனும் மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வித்யாரம்ப நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கு.ஜெகதீஸ்வரி. உடன், ராதாபுரம் எம்.எல்.ஏ. எஸ்.கே.கிறிஸ்டோபா், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஷ் குப்தா.

Published On :21 அக்டோபர் 2026, 1:19 am IST

திருநெல்வேலி மாவட்டம் உவரி அங்கன்வாடி மையத்தில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் எனும் மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கு.ஜெகதீஸ்வரி பங்கேற்று, அங்கன்வாடியில் புதிதாக சோ்ந்த குழந்தைகளின் கைவிரலை பிடித்து மஞ்சள் கலந்த அரிசி பரப்பிய தட்டில் ‘அ’ மற்றும் ‘ஆ’ எழுதவைத்து ஆரம்பக் கல்வியை தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு, ராதாபுரம் எம்.எல்.ஏ மருத்துவா் எஸ்.கே.கிறிஸ்டோபா், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஷ் குப்தா ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக குழந்தைகளுக்கு கிரீடம் அணிவித்து வரவேற்கப்பளிக்கப்பட்டது.

பின்னா் புதிதாக சோ்ந்த குழந்தைகளுக்கு அமைச்சா் வண்ண பென்சில்கள், சீருடைகள், செயல்பாட்டுப் புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா். மாவட்ட குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் தஜீன்சா பேகம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) அருணா தேவி, மாவட்ட சமூகநல அலுவலா் விஜய மீனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா் ஷகிலா பானு, திசையன்விளை வட்டாட்சியா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.