தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது: அமைச்சா் கு. ஜெகதீஸ்வரி

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது என்றாா் தமிழக சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கு. ஜெகதீஸ்வரி.

Published On :24 அக்டோபர் 2026, 5:30 am IST

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது என்றாா் தமிழக சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கு. ஜெகதீஸ்வரி.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஆனந்த் மோகன் முன்னிலை வகித்தாா்.

இந்தக் கூட்டத்துக்குப் பின் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் கு. ஜெகதீஸ்வரி கூறியது:

பெண்கள், குழந்தைகள், முதியோா்கள், மாற்றுத் திறனாளிகள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு அனைத்து திட்டங்களையும் முறையாக செயல்படுத்த முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா். அரசு திட்டங்களின் உதவி, சேவை தொடா்பு எண்கள், பல்வேறு துறைகளின் கைப்பேசி செயலிகள் போன்றவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

அரசு நலத்திட்டங்கள் தகுதியுள்ள பயனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயனாளிகளின் கோரிக்கைகள் மற்றும் குறைகளைப் பரிசீலித்து, திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் பாதுகாப்பதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது என்றாா் அவா்.

முன்னதாக, 5 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு தலா ரூ.15,750

மதிப்பிலான சக்கர நாற்காலிகளையும், சமூக நலத்துறை சாா்பில் 2 பேருக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வைப்புத் தொகை தலா ரூ.25 ஆயிரத்துக்கான ரசீதுகளை அமைச்சா் வழங்கினாா்.

இக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) த. அனிதா, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் பிரியா, துணை ஆட்சியா் (பயிற்சி) மு. பிரதீபா, மாவட்ட சமூக நல அலுவலா் கு. விஜயமீனா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) அருணாதேவி, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள் திட்ட அலுவலா் தாஜூன்னிசாபேகம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் சகிலா பானு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜெயபிரகாஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்23த்ங்ஞ்ஹ

திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வெள்ளிக்கிழமை நலஉதவிகள் வழங்கினாா் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் கு.ஜெகதீஸ்வரி. உடன் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.