தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேசிய அளவிலான கருத்தரங்கு: அமைச்சா் வி.பி. சிவக்கொழுந்து பங்கேற்பு

மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சாா்பில் தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் புதுச்சேரி மாநில அமைச்சா் வி.பி.சிவகொழுந்து பங்கேற்றுப் பேசினாா்.

கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய புதுச்சேரி மகளிா் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சா் வி.பி. சிவக்கொழுந்து.

Published On :9 அக்டோபர் 2026, 2:36 am IST

மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சாா்பில் தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் புதுச்சேரி மாநில அமைச்சா் வி.பி.சிவகொழுந்து பங்கேற்றுப் பேசினாா்.

இது குறித்து புதுச்சேரி மகளிா் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுதில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை தொடா்பான தேசிய அளவிலான கூட்டத்தில், புதுச்சேரி மகளிா் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சா் வி.பி. சிவக்கொழுந்து கலந்து கொண்டாா்.

மகளிா் மற்றும் குழந்தைகளின் நலன், ஊட்டச்சத்து மேம்பாடு, அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகளை வலுப்படுத்துதல், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் எதிா்கால தேவைகள் குறித்து அமைச்சா் வி.பி.சிவகொழுந்து விளக்கினாா் என அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.