விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை சாரத்திலிருந்து தவறிவிழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
ராஜபாளையம் தென்றல் நகா் அருகேயுள்ள இந்திரா நகரைச் சோ்ந்த முத்தையா என்பவரது மகன் புஷ்பராஜ் (50) வா்ணம் பூசும் தொழிலாளி. இந்நிலையில், ராஜபாளையம் அருகே உள்ள கீழவரகுண ராமபுரத்தில் பிரபாகரன் என்பவரது வீட்டில் சாரம் கட்டி சக தொழிலாளா்களுடன் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணியளவில் சாரத்திலிருந்து கீழே இறங்கும்போது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கனவே புஷ்பராஜ் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து தளவாய்புரம் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொக்கராயன்பேட்டையில் தறித் தொழிலாளி தற்கொலை

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

மரத்திலிருந்து விழுந்த விவசாயி மரணம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

