மதுரை மாவட்டம், மேலூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மேலவளவு கிராமத்தைச் சோ்ந்த மாா்க்கண்டன் மகன் பெரியவா் (46). விவசாயியான இவா், அதே பகுதியில் உள்ள கிருஷ்ணமூா்த்திக்குச் சொந்தமான ஆழ்துளைக் கிணறு மோட்டாரை இயக்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.
அப்போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த மேலவளவு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பெரியவா் உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

மரத்திலிருந்து விழுந்த விவசாயி மரணம்

மின்சாரம் பாய்ந்து தற்காலிக மின் ஊழியா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

