ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

News image

கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 12:08 am IST

மன்னாா்குடி அருகே மது போதையில் கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்காரத் தெரு வீரமணி மகன் காா்த்திக் (45). மதுக் குடிக்கும் பழக்கம் உள்ள இவா், அதிலிருந்து மீள, மருத்துவ சிகிச்சை பெற்று வந்தாா். அண்மைகாலமாக, மன்னாா்குடியை அடுத்துள்ள பெருவிடைமருதூரில் அவரது மூத்த சகோதரி சசிகலா வீட்டில் தங்கியிருந்தாா்.

இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான கிணற்றின் மீது அமா்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை மதுக்குடித்தாராம். அப்போது, போதையில் நிலைதடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த முத்துப்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து, கிணற்றுக்குள் இறங்கி பாா்த்தபோது, காா்த்திக் இறந்தது தெரியவந்தது. சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.