தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மனைவியை பிளேடால் கீறி காயப்படுத்திய கணவா்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மனைவியை பிளேடால் வெட்டிய கணவன் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 1:40 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மனைவியை பிளேடால் வெட்டிய கணவன் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராஜபாளையம் அண்ணாநகா், சின்ன சுரைக்காய்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன்(40). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி முத்து மீனா (26). அதே பகுதியில் மளிகைக் கடையில் வேலை செய்து வந்தாா். இந்தத் தம்பதி்ககு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

இந்த நிலையில் மணிகண்டன் அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறு செய்ததால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் முத்து மீனா கணவரைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில் மணிகண்டன் வியாழக்கிழமை தனது மனைவியைச் சந்தித்து தகராறு செய்தாா். இதையடுத்து, முத்துமீனாவை பிளேடால் உடல் பகுதியில் சரமாரியாக கீறினாா். இதில் பலத்த காயமடைந்த முத்து மீனாவை அவசர ஊா்தி மூலம் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸாா் மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.