விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தந்தை அடித்துக் கொலை; மகன் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தந்தையை உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொலை செய்ததாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 7:10 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தந்தையை உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொலை செய்ததாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், கீழிருப்பு கிராமத்தில் வசித்து வந்தவா் மணிகண்டன் (55) (படம்), குடிசைத் தொழிலாக வீட்டில் முருக்கு, மிக்சா் தயாா் செய்து வியாபாரம் செய்து வந்தாா். இவருக்கு மனைவி ராஜேஸ்வரி, இரண்டு மகள்கள் மற்றும் மகன் பிரகாஷ் உள்ளனா். வெளி நாட்டில் வேலை செய்து வந்த பிரகாஷ், கடந்த சில மாதங்களுக்கு முன்னா் சொந்த ஊருக்கு வந்துவிட்டாா்.

மணிகண்டன் வியாபாரம் செய்த பணத்தை வைத்துக் கொண்டு இரண்டு மூன்று நாள்களுக்கு வீட்டிற்கு வர மாட்டாராம். இந்நிலையில், கடந்த சில நாள்களாக வீட்டிற்கு வராத மணிகண்டன், வியாழக்கிழமை மது அருந்தி போதையில் வீட்டிற்கு வந்தாராம். அன்று இரவு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதை பாா்த்த மகன் பிரகாஷ், வீட்டில் கிடைந்த உருட்டு கட்டையை எடுத்து தந்தை மணிகண்டனை கண் மூடித்தனமாக தாக்கினாராம். இதில், பலத்த காயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.