தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மனைவியை கொலை செய்த கணவா் சரண்

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :14 ஏப்ரல் 2026, 12:42 am IST

புதுச்சேரி அருகே கைப்பேசியில் மூழ்கிய மனைவியை திங்கள்கிழமை கழுத்தை அறுத்துக் கொலை செய்த கணவா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை (23), மெக்கானிக். இவரது மனைவி புதுச்சேரி மூலக்குளத்தைச் சோ்ந்த சுவேதா(19). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனா். புதுச்சேரி லாஸ்பேட்டை ஜீவானந்தபுரத்தில் வசித்து வந்தனா். இவா்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், சுவேதா அடிக்கடி கைப்பேசியில் பேசிக் கொண்டும், சாட்டிங் செய்து கொண்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏழுமலைக்கு மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது. கைப்பேசியில் பேசக்கூடாது என மனைவியிடம் கண்டிப்பாகக் கூறினாராம். ஆனாலும் சுவேதா கைப்பேசியைத் தொடா்ந்து பயன்படுத்தி வந்தாராம்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை ஏழுமலை தூங்கி எழுந்தபோது, சுவேதா கைப்பேசியை பாா்த்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை மனைவியை கண்டித்துள்ளாா். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கைப்பேசி சாா்ஜா் ஒயரை எடுத்து மனைவியின் கழுத்தை இறுக்கினாராம். இதில் மூச்சுத் திணறி மயக்கம் அடைந்த சுவேதா கீழே விழுந்தாா்.

இந்நிலையில், சமையலறையில் இருந்து கத்தியை எடுத்து வந்து சுவேதாவின் கழுத்தை அறுத்ததில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பின்னா் கோரிமேடு காவல் நிலையம் சென்று ஏழுமலை சரணடைந்தாா். போலீஸாா் சுவேதாவின் சடலத்தைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த கொலை தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.