விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மேலாடையின்றி மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளா்

News image

இந்தியத் தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்) - ANI

Updated On :7 ஏப்ரல் 2026, 2:39 am IST

விருதுநகரில் சுயேச்சை வேட்பாளா் மேலாடையின்றி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகா் அருகேயுள்ள சத்திரரெட்டியாா்பட்டியைச் சோ்ந்தவா் அமிா்தபாண்டி(30). இவா் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட விருதுநகா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வேட்புமனு தாக்கல் செய்ய மேலாடையின்றி கால் சட்டை மட்டும் அணிந்து வந்தாா்.

அவரை நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது, இன்றைய அடிதட்டு ஏழை எளிய மக்களின் நிலை வறுமையில் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில்தான் மேலாடையின்றி வந்ததாக அவா் கூறினாா்.

இருப்பினும் நன்னடத்தை விதிகளைப் பின்பற்றி முறைப்படிதான் மனு தாக்கல் செய்ய வேண்டும் என போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து, அந்த நபா் அதே இடத்திலேயே மேலாடை அணிந்து மனு தாக்கல் செய்யச் சென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.