மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

செல்போனில் 4கே தர விடியோ எடிட் சாத்தியம்! ஆன்டிராய்டு அடோப் பிரீமியர்!

ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் விடியோ எடிட் செய்யும் வகையில் அடோப் பிரீமியர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது...

Premiere for Android

அடோப் பிரீமியர் - கோப்புப் படம்

Published On :20 அக்டோபர் 2026, 7:09 pm IST

ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் விடியோ எடிட் செய்யும் வகையில் அடோப் பிரீமியர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கச்சிதமான தொழில்முறை விடியோ எடிட் செய்ய கணினியோ மடிக்கணினியோ தேவைப்பட்டுக்கொண்டிருந்தது. ஏனெனில் அடோப் பிரீமியர் மென்பொருள் அதில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.

தற்போது செல்போனிலேயே விடியோ எடிட் செய்யும் வகையில் அடோப் பிரீமியர் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் கணினி இல்லாமல், செல்போனிலேயே இதனைப் பயன்படுத்தி விடியோக்களை எடிட் செய்யலாம்.

கணினிப் பயன்பாட்டு அடோப் பிரீமியர் போலவே, செல்போனிலும் விடியோக்களை வெட்டலாம், ஒன்றிணைக்கலாம். மேலும், விடியோக்களுக்குத் தேவையான எழுத்துக்கள், இசைக் கோர்வைகள், குரல் பதிவுகள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

விடியோக்களில் உள்ள இரைச்சலையும் கட்டுப்படுத்தி, கணினியில் கிடைக்கும் தரத்துக்கு செல்போனிலேயே எடிட் செய்யலாம். அதாவது 4கே தரத்தில் கூட விடியோக்களை உருவாக்கலாம்.

இதன்மூலம் யூடியூப் ஷார்ட்ஸ், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பதிவிடும் பயனர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அடோப் பிரீமியர் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் செல்போன்களுக்கான அடோப் பிரீமியர் 62.3 MB ஆக இருந்தது. தற்போது 153 MB முதல் 168 MB வரை இதன் தரவிறக்க கொள்ளளவு உள்ளதால், குறைந்தது 5GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போனில் மட்டுமே பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

4K video editing is possible on your mobile phone Adobe Premiere for Android

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.