மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆரோக்கியம்தான்... ஆனால்! வைரலாகும் நானா படேகரின் விடியோ!

நடிகர் நானா படகேர் மறைவுக்கு ரஜினி இரங்கல்...

நடிகர் நானா படகேர்

Published On :8 அக்டோபர் 2026, 11:35 am IST

நடிகர் நானா படகேரின் மறைவைத் தொடர்ந்து அவரின் உடற்பயிற்சி விடியோ வைரலாகி வருகிறது.

இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகர் நானா படேகர் (75). ஹிந்தியிலும் மராத்தியிலும் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்து சிறந்த குணச்சித்திர, வில்லன் கதாபாத்திரங்களுக்கு பல விருதுகளையும் வென்றார். தமிழில் பொம்மலாட்டம் திரைப்படத்தில் தனித்துவமான கவனம் பெற்ற நானா படேகர் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து காலா திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.

தற்போது, நானா படேகர் இன்று (வியாழக்கிழமை ) அதிகாலை காலமானார். கோவாவில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபோது அவருக்கு திடீரென கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதையடுத்து அவர் மயங்கிய நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, 45 நிமிடங்கள் வரை தொடர்ச்சியாக உயிர் காக்கும் ஆஞ்சியோ அளிக்கப்பட்ட போதிலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

நானா படேகரின் இந்த மறைவு இந்திய அளவில் பல மொழி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கல்களைப் பகிர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் நானா படேகரின் உடற்பயிற்சி விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வயதிலும் உடலைச் சரியாகப் பேணியவருக்கு எப்படி மாரடைப்பு நிகழ்ந்தது என பலரும் வருத்தமாக கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Following the passing of actor Nana Patekar, a video of him working out is going viral.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.