கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

யூடியூப் மியூசிக்கில் ஏஐ பாடல்களைக் கண்டுபிடிப்பது எப்படி?

யூடியூப் மியூசிக்கில் ஏஐ பாடல்களைக் கண்டுபிடிக்கும் புதிய அம்சம் குறித்து...

பிரதிப்படம்

Published On :20 அக்டோபர் 2026, 5:51 pm IST

ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட பாடல்களைக் கண்டுபிடிக்கும் புதிய அம்சம் யூடியூப் மியூசிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்துகுச் சொந்தமான யூடியூப் மியூசிக் செயலியை 119 நாடுகளில் உள்ள கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஏஐ வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், பலர் செய்யறிவு மூலம் பாடல்களை உருவாக்கி அதனை யூடியூப் மியூசிக் செயலில் பதிவேற்றம் செய்து விடுகின்றனர்.

இதனால் யூடியூப் மியூசிக்கில் உள்ள பல பாடல்கள் செய்யறிவு மூலம் உருவாக்கப்பட்டதா? அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டதா? என பயனர்கள் குழப்பமடைகின்றனர்.

இந்த நிலையில், தற்போது யூடியூப் மியூசிக்கில் ஒரு பாடலை இயக்கும்போது, அந்தப் பாடலின் தலைப்பு மற்றும் கலைஞர் பெயருக்குக் கீழே ஒரு சிறிய ஏஐ குறியீடு காட்டப்படும். இடனடிப்படையில் எளிதாக அது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட பாடல் என்பதை பயனர்கள் தெரிந்துகொள்ளலாம்.

அந்த ஏஐ குறியீட்டை கிளிக் செய்தால், பாடல் முழுவதும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா? அல்லது சில பகுதிகளுக்காக ஏஐ பயன்படுத்தப்பட்டதா? போன்ற முழு விவரங்களும் அதில் இடம்பெறும். இந்த அம்சத்தை ஏஐ கண்டறிதல் கருவிகளின் உதவியுடன் யூடியூப் மியூசிக் செயல்படுத்தியுள்ளது.

மேலும், ஆப்பிள் மியூசிக், ஸ்பாட்டிஃபை போன்ற இசைத் தளங்களும் யூடியூப் மியூசிக் போன்று ஏஐ பாடல்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடதத்தக்கது.

Summary

A new feature to discover songs created by AI has been introduced on YouTube Music.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.