தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பால் டப்பாவின் விடியோ ஆல்பம்

சுயாதீன இசை உலகில் முன்னணி இசைக்கலைஞர் பால் டப்பா.

Published On :1 நவம்பர் 2026, 12:37 pm IST

சுயாதீன இசை உலகில் முன்னணி இசைக்கலைஞர் பால் டப்பா. இவரது மியூசிக் ஆல்பம் வெளியானவுடன் அதிகப்படியான டிஜிட்டல் பார்வைகளைப் பெற்று இணையத்தை அதிர வைத்து வருகிறது.

இவர் அண்மையில் பாடல் எழுதி, பாடி, நடித்த 'ஏரோபிளேன்' எனும் விடியோ ஆல்பத்தை 'திங்க் இன்டி மியூசிக் நிறுவனம்' வெளியிட்டிருக்கிறது. அதில் நடிகை அனன்யா ராம் பிரசாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ராகுல் அசோக் குமார் இயக்க, அடியேல் மஸார் இசையமைத்துள்ளார். பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

'காதல் வேணாம்னு சொன்னா காதல் பண்ண சொன்னாயே...' எனத் தொடங்கும் இந்தப் பாடலில், விமானப் பயணிகளாகப் பிரிந்த காதலர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள். அவர்களின் காதல்... நினைவலைகளாக இசையுடன் பயணிக்கிறது. பால் டப்பா மற்றும் அனன்யா ராம் பிரசாத்தின் கெமிஸ்ட்ரியானது இசையுடன் இணைந்து ரசிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது. இது ஒரு லவ் பெயிலியர் சாங் என்பதாலும், பிரிவுக்குப் பிறகான சந்திப்பு குறித்தது என்பதாலும் சிங்கிள் பாய்ஸ்களின் ஸ்டேட்டஸாக மாறி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.