மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாற்றமின்றி தொடங்கிய பங்குச் சந்தை! சென்செக்ஸ், நிஃப்டி சரிவு!

வாரத்தின் முதல் நாளான இன்று (அக். 19) இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியது குறித்து...

Stock Market Sensex, Nifty open flat

கோப்புப் படம்

Published On :19 அக்டோபர் 2026, 10:34 am IST

வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 521 புள்ளிகள் சரிவுடனும் நிஃப்டி 23100 புள்ளிகளுக்கு கீழும் வணிகமாகி வருகிறது.

நடுத்தர மற்றும் சிறு, குறு தர நிறுவனங்கள் 0.5% வரை சரிவுடன் வணிகமாகி வருகின்றன. பொதுத் துறை வங்கிகள் 2% உயர்வுடனும் தனியார் துறை வங்கிகள் 2% சரிவுடனும் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 74,849 புள்ளிகளுடன் வணிகம் தொடங்கியது. 10.15 மணி நிலவரப்படி, 254 புள்ளிகள் சரிந்து 74,474 புள்ளிகளாக வணிகமாகி வருகிறது. இது மொத்த வணிகத்தில் 0.34 சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, இன்று காலை 74,849 புள்ளிகளுடன் வணிகம் தொடங்கியது. 10.15 மணி நிலவரப்படி 51 புள்ளிகள் சரிந்து 23,058 புள்ளிகளுடன் வணிகமாகி வருகிறது. மொத்த வணிகத்தில் இது 0.24% சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 14 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடனும் எஞ்சிய 16 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.

அதிகபட்சமாக அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகள் 2.64% உயர்வுடன் வணிகமாகி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக எஸ்பிஐ பங்குகள் 1.77%, எல்&டி 1.48%, மாருதி சுசூகி 1.21%, அதானி போர்ட்ஸ் 1.01%, ரிலையன்ஸ் 0.99%, பவர் கிரிட் 1.05% உயர்வுடன் வணிகமாகி வருகின்றன.

ஆக்ஸிஸ் வங்கி 3.66% சரிவுடன் வணிகமாகி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக எச்.டி.எஃப்.சி வங்கி -2.14%, ட்ரெண்ட் -1.73%, இன்ஃபோசிஸ் -1.39%, ஹிந்துஸ்தான் யூனிலிவர்ஸ் -1.04%, பஜாஜ் ஃபைனான்ஸ் -0.57% வணிகமாகி வருகிறது.

நிஃப்டி பட்டியலில் உள்ள முதல் 50 தரப் பங்குகளில் பிஎன்பி, கரூர் வைசியா வங்கி, சென்னை பெட்ரோ, கனரா வங்கி, யூனியன் வங்கி, காப்ரி குளோபல் ஆகியவை ஆதாயப் பட்டியலில் உள்ளன.

Summary

Stock Market Sensex, Nifty open flat Oil Retreats From 5-Month High

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.