மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பங்குச்சந்தை சரிவுடன் தொடக்கம்! ஐடி, எண்ணெய் & எரிவாயு பங்குகள் வீழ்ச்சி!

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

NSE

பங்குச்சந்தை - ANI

Published On :27 அக்டோபர் 2026, 10:33 am IST

இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கினாலும் உயர்ந்து முடிந்தன. தொடர்ந்து இன்று (அக். 27) இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 73,484.38 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 10.30 மணி நிலவரப்படி 224.40 புள்ளிகள் சரிந்து 73,382.35 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 58.20 புள்ளிகள் குறைந்து 22,695.00 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

துறைவாரியாக, நிஃப்டி ஐடி, எண்ணெய் & எரிவாயு குறியீடுகள் முறையே 1.6 சதவீதம், 0.8 சதவீதம் சரிவைச் சந்தித்தன. தொடர்ந்து நிஃப்டி நுகர்வோர் பொருள்கள் மற்றும் தனியார் வங்கி குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. மற்ற துறைகள் ஏற்றம் கண்டு வருகின்றன.

சென்செக்ஸ் 30 பங்குகளில் 19 பங்குகள் உயர்ந்தும் 11 பங்குகள் சரிந்து வர்த்தகமாகின்றன.

மறுபுறம் நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 0.07 சதவீதம் உயர்ந்த நிலையில், நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 1 சதவீதம் வளர்ச்சி கண்டது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.17 ஆகத் தொடங்கியுள்ளது.

Summary

Stock Market: Sensex falls 192 pts to trade lower, Nifty at 22,723; IT leads sectoral loss

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.