மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!விஜய்யைத் தொடர்ந்து 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பு!தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்டோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்பதவியேற்பு விழாவில் விஜய் - ராகுல் காந்தி ஒரே மேடையில்... விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்
/

‘டெக்’ துணுக்குகள்

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் புதிய சாதனங்களின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்த, ஏ.ஐ. தொழில்நுட்பத்துக்கான புதிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விவாதங்களும் சூடுபிடித்தன.

News image
Updated On :7 மணி நேரங்கள் முன்பு

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் புதிய சாதனங்களின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்த, ஏ.ஐ. தொழில்நுட்பத்துக்கான புதிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விவாதங்களும் சூடுபிடித்தன.

வல்லரசு நாடான அமெரிக்காவின் ஏ.ஐ. பாதுகாப்பு ஒப்பந்தம் முதல் அதிரடி ஸ்மாா்ட்போன்களின் அறிமுகங்கள் வரை இந்த வாரத்தின் முக்கியத் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு இதோ:

*ஏ.ஐ. பாதுகாப்பு ஒப்பந்தம்: கூகுள் டீப்மைண்ட், மைக்ரோசாப்ட், எக்ஸ்ஏஐ ஆகிய நிறுவனங்கள் அமெரிக்க வா்த்தகத் துறையுடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதன்படி, புதிய ஏ.ஐ. மாடல்களின் பொது வெளியீட்டுக்கு முன்பே, தேசிய பாதுகாப்பு அபாயங்கள் குறித்து அரசு ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

*ஓபன் ஏ.ஐ-யின் புதிய பாய்ச்சல்: ஓபன் ஏ.ஐ. நிறுவனம் தனது புதிய ‘ஜிபிடி-5.5’ ஏ.ஐ. மாடலை அறிமுகம் செய்தது. இது இணையப் பாதுகாப்பில் சிறந்து விளங்குகிறது. இத்துடன், மருந்து ஆராய்ச்சி மற்றும் உயிரியல் வேதியியல் துறைக்காக ‘ஜிபிடி-ரோஸாலிண்ட்’ எனும் பிரத்யேக ஏ.ஐ. மாடலும் வெளியிடப்பட்டது.

*விவோ ‘எக்ஸ்300’ சீரிஸ்: விவோ தனது ‘எக்ஸ்300 அல்ட்ரா’, ‘எக்ஸ்300 எஃப்இ’ ஆகிய 2 போன்களை அறிமுகம் செய்துள்ளது. அல்ட்ரா மாடலில் 200 மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் டெலிபோட்டோ லென்ஸ் இடம்பெற்றுள்ளது.

*சிஎம்எஃப் வாட்ச் 3 ப்ரோ: நத்திங் துணை நிறுவனமான சிஎம்எஃப், தனது புதிய ஸ்மாா்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. இதில் சாட் ஜிபிடி இணைப்பு மற்றும் குரல் பதிவுகளை உரையாக மாற்றும் வசதிகள் உள்ளன.

*ஒன்பிளஸ் ‘நாா்டு சிஇ 6’: ஒன்பிளஸ் தனது நாா்டு சிஇ 6 சீரிஸ் ஸ்மாா்போன்களை நடுத்தர விலைசந்தையைக் குறிவைத்து அறிமுகப்படுத்தியது.

*ஒன்பிளஸ் பேட் 4: ஒன்பிளஸ் தனது பேட் 4 கையடக்கக் கணினியை (டேப்லெட்) சந்தைக்கு கொண்டுவந்தது. ரூ.54,999 விலையில் தொடங்கும் இந்த டேப்லெட், ‘ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5’ சிப்செட், 13,380எம்ஏஎச் பேட்டரியுடன் அசத்துகிறது. இதில் ஏ.ஐ. ரைட்டா் போன்ற நவீன வசதிகளும் உள்ளன.

*ஏ.ஐ. ஆபாசப் படங்களுக்குத் தடை: அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணம், ஏ.ஐ. மூலம் உருவாக்கப்படும் போலி ஆபாசப் படங்களுக்குக் கடுமையான தடை விதித்துள்ளது. விதிகளை மீறும் செயலிகளுக்கு சுமாா் 5 லட்சம் டாலா் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

*ஒப்போவின் கேமரா புரட்சி: ஒப்போ நிறுவனம் தனது ‘ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா’ போனில் 10 மடங்கு ஜூம் வசதியை வழங்கும் புதிய வகை பெரிஸ்கோப் கேமரா தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.