உலக சிட்டுக்குருவிகள் தினத்தையொட்டி, கோவையை தலைமையிடமாக கொண்டு 12 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சிட்டுக்குருவிகள் அறக்கட்டளை புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன் முக்கிய நிகழ்வாக, சிட்டுக்குருவி பாதுகாப்பு குறித்த சந்தேகங்களுக்குப் பதிலளிக்கும் ‘சிட் ஏஐ’ என்ற செயற்கை நுண்ணறிவு உதவியாளரை ஆா்.வி.எஸ். கல்விக் குழுமத்தின் நிா்வாக இயக்குநா் க.செந்தில்கணேஷ் அறிமுகப்படுத்தினாா். இதை அறக்கட்டளை நிறுவனா் ந.தனசேகா் பெற்றுக்கொண்டாா்.
நிகழ் ஆண்டு சிறப்பம்சமாக தொழில்நுட்பம் மற்றும் இயற்கைப் பாதுகாப்பை இணைக்கும் நோக்கில் 3 முக்கிய அம்சங்கள் அறக்கட்டளையின் இணையதளத்தில் சோ்க்கப்பட்டுள்ளன. அதன்படி, சிட்டுக்குருவிகளுக்கு கூடு அமைத்தல் மற்றும் பராமரிப்பு குறித்து மாணவா்களும், பொதுமக்களும் கேட்கும் கேள்விகளுக்கு ‘ஸ்பேரோ ஏஐ’ உடனுக்குடன் பதிலளிக்கும். மேலும், வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இயற்கை சூழலை உருவாக்க உதவும் வகையில் சிட்டுக்குருவிகளின் ‘சிப்பிங் ஒலி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதன் நிறுவனா் ந.தனசேகா் கூறுகையில், டிஜிட்டல் ஹீட் மேப் வசதி மூலம் எந்தெந்தப் பகுதிகளில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பதைப் பொதுமக்கள் நேரடியாக கண்காணிக்க முடியும். பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் பள்ளிகளில் கூடு பெட்டிகளை அமைத்து, நகா்ப்புற பறவைப் பாதுகாப்பு அறிவியலை வலுப்படுத்த வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘டெக்’ துணுக்குகள்

ரயில்வே மின்பாதை பராமரிப்பில் புதிய மைல் கல்: நாசரேத்தில் சிறப்பு ரயில் பெட்டி அறிமுகம்

‘டெக்’ துணுக்குகள்..

ஸ்வயம் பிளஸ் தளம்: புதிய ‘ஏஐ’ பாடப்பிரிவுகள்! சென்னை ஐஐடி-யில் அறிமுகம்
விடியோக்கள்

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

