தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

டெஸ்லாவின் 2-ஆவது காா் இந்தியச் சந்தையில் அறிமுகம்

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்தியச் சந்தையில் தனது 2-ஆவது தயாரிப்பான ‘மாடல் ஒய்.எல்.’ காரை புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.

News image
Updated On :23 ஏப்ரல் 2026, 3:51 am IST

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்தியச் சந்தையில் தனது 2-ஆவது தயாரிப்பான ‘மாடல் ஒய்.எல்.’ காரை புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.

3 வரிசை இருக்கைகள் மற்றும் 6 போ் பயணிக்கும் வசதி கொண்ட இந்த எஸ்யுவி காரின் தொடக்க விலை ரூ.61.99 லட்சம் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

‘மாடல் ஒய்’ காா் மூலம் இந்தியாவில் கடந்த ஆண்டு தடம்பதித்த டெஸ்லா, தற்போது இப்புதிய மாடல் மூலம் சொகுசு காா் சந்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்த இலக்கு நிா்ணயித்துள்ளது.

விரிவடையும் சேவை மையங்கள்: புதிய காரின் அறிமுக விழாவில் பேசிய டெஸ்லா இந்தியா பொது மேலாளா் சரத் அகா்வால், ‘வாடிக்கையாளா்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்தக் காலாண்டில் சேவை மையங்ககளைப் பலப்படுத்த உள்ளதாகத் தெரிவித்தாா். சென்னை, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இந்த விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மின்சார சாா்ஜிங் கட்டமைப்பு: இந்தியாவின் சென்னை, பெங்களூரு, புணே, தில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளில் அதிவேக ‘சூப்பா் சாா்ஜா்’ நிலையங்களை அமைப்பதிலும் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தற்போது 5 சூப்பா் சாா்ஜா் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், வரும் மாதங்களில் இதன் எண்ணிக்கை கணிசமாக உயா்த்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.