டொயோட்டா நிறுவனம் தனது புதிய காரை அறிமுகம் செய்த ஒரு மணிநேரத்தில் 3,000 முன்பதிவுகளைப் பெற்றுள்ளது.
ஜிஏசி குழுவுடன் இணைந்து பிஇஸட்7 (bZ7) என்ற புதிய மின்சார காரை டொயோட்டா நிறுவனம் தயாரித்துள்ளது. சீனாவில் கடந்த வாரம் இந்த கார் அறிமுகமானது. இதன் அறிமுக விலை 1,99,800 யுவான் (ரூ. 27.21 லட்சம்).
இந்தக் கார் கடந்த வார இறுதியை இலக்கு வைத்து வெளியிடப்பட்ட நிலையில், அதிக தரப்பிலான மக்களால் கவரப்பட்டுள்ளது. ஒரு மணிநேரத்தில் 3,100 முன்பதிவுகள் கிடைத்துள்ளதாக ஜிஏசி - டொயோட்டா துணைத் தலைவர் பென் பெளலின் தெரிவித்துள்ளார்.
மின்சார கார்கள் பிரிவில் உலகளவில் டொயோட்டா நிறுவனம் இதுவரை அறிமுகம் செய்துள்ள தயாரிப்புகளை விட மேம்பட்டதாக பிஇஸட்7 உள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிடுகிறது.
'ஹியூமன் - கார் - ஹோம்' என்ற ஸ்மார்ட் டிரைவிங் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் காரில் இருந்தவாறே வீட்டில் உள்ள நவீன மின்சாரப் பொருள்களைக் கட்டுப்படுத்த முடியும். ஷாவ்மி நிறுவனத்துடன் இணைந்து இதனை டொயோட்டா செய்துள்ளது.
நேவிகேஷன், ஆட்டோபைலட் போன்ற 50 வகையிலான பாதுகாப்பு மற்றும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
கார் இருக்கைகளில் அமர்ந்திருக்கும்போது புவிஈர்ப்பு விசையால் உருவாகும் வெப்பத்தைக் கூட உணர முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், அதிக வெப்பமோ, குளிரோ காருக்குள் இருக்காது. காரினுள்ளேயே குளிரூட்டியுடன் குளிர்பதன வசதியும் பொருத்தப்பட்டுள்ளது.
15.6 அங்குல தகவல் பலகை, ஓட்டுநருக்காக 8.8 திரை உள்ளது. இரட்டை சேம்பர் சஸ்பென்ஷன் உள்ளதால், காரில் எந்தவித அதிர்வுகளும் இல்லாமல் பயணிக்க முடியும்.
டெஸ்லா மாடலை முன்மாதிரியாகக் கொண்டு காரின் நீளம், உயரம் மற்றும் அகலம் நிர்ணயிக்கப்படுள்ளது. 513 செ.மீ. நீளம், 196.5 செ.மீ. அகலம், 150 செ.மீ. உயரம் கொண்டது.
71 kWh மற்றும் 88 kWh என்ற இரு வகையிலான பேட்டரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 600 கி.மீ. முதல் 700 கி.மீ. வரை பயணிக்க முடியும்.
3சி வேகமாக சார்ஜ் ஆகும் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளதால், 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 300 கி.மீ. வரை செல்ல முடியும் என டொயோட்டா கூறுகிறது.
காரின் பேட்டரிக்கு 2 ஆண்டுகள் வாரண்டி கொடுக்கப்பட்டுள்ளது அல்லது 50,000 கி.மீ. வரை வாரண்டியை பெற்றுக்கொள்ளலாம். இதற்குள் பேட்டரியை மாற்றம் செய்ய வேண்டுமென்றால், இலவசமாக செய்து தரப்படும் என டொயோட்டா குறிப்பிட்டுள்ளது.
Summary
Toyota’s new luxury EV in China receives over 3,000 orders in 1 hour
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெஸ்லா - ஒய் எல்: புதிய வேரியண்ட் அறிமுகம்!

ராயல் என்ஃபீல்டின் புதிய அவதாரம்: ‘ஃபிளையிங் ஃபிளீ’ மின்சார பைக் அறிமுகம்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 681 கி.மீ. பயணம்! டெஸ்லா மாடல் ஒய் எல் 3 மின்சார கார் அறிமுகம்!

261 கி.மீ. மைலேஜ்! இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நவீன மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


