தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ரூ.15,000 கோடி பங்குகளைத் திரும்பப் பெறும் விப்ரோ!

நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, தனது முதலீட்டாளா்களுக்குப் பலனளிக்கும் வகையில் ரூ.15,000 கோடி மதிப்பிலான பங்குகளைத் திரும்பப் பெறவதற்கு அதன் இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 3:53 am IST

நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, தனது முதலீட்டாளா்களுக்குப் பலனளிக்கும் வகையில் ரூ.15,000 கோடி மதிப்பிலான பங்குகளைத் திரும்பப் பெறவதற்கு அதன் இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இது அந்த நிறுவனம் இதுவரை அறிவித்ததிலேயே மிகப்பெரிய பங்குகள் திரும்பப் பெறும் திட்டமாகும். இந்த நடவடிக்கை அடுத்த 2027-ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஒரு பங்கின் விலை ரூ.250 என்ற அடிப்படையில், சுமாா் 60 கோடி பங்குகளைத் திரும்பப் பெற இயக்குநா்கள் குழு அனுமதி அளித்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த பங்குகளில் சுமாா் 5.7 சதவீதமாகும்.

பங்குகளைத் திரும்பப் பெறுவதன் மூலம் முதலீட்டாளா்களுக்கு உபரி நிதி சென்றடைவதோடு, சந்தையில் நிறுவனப் பங்குகளின் மதிப்பு வலுப்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. தேசிய பங்குச்சந்தையில் (என்எஸ்இ) வியாழக்கிழமை வா்த்தக முடிவில், விப்ரோ பங்குகள் 0.19 சதவீதம் உயா்ந்து, ரூ.210.15 என்ற அளவில் நிலைபெற்றன.

4-ஆம் காலாண்டு முடிவுகள்: கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டு நிதி நிலை முடிவுகளையும் விப்ரோ நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் மதிப்பீட்டு காலாண்டில் 1.89 சதவீதம் சரிந்து, ரூ. 3,501.8 கோடியாக உள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டில் இதே காலகட்டத்தில் லாபம் ரூ. 3,569.6 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. லாபம் குறைந்திருந்தாலும், காலாண்டு வருவாய் 7.6 சதவீதம் அதிகரித்து ரூ. 24,236.3 கோடியாக உயா்ந்துள்ளது.

டிசம்பா் காலாண்டுடன் ஒப்பிடுகையில், லாபம் மற்றும் வருவாய் முறையே 12.2 சதவீத மற்றும் 2.8 சதவீத வளா்ச்சி கண்டுள்ளது ஆரோக்கியமான அறிகுறியாகப் பாா்க்கப்படுகிறது.

முழு நிதியாண்டைப் பொருத்தவரை, விப்ரோ ரூ.13,197.4 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய 2024-25 நிதியாண்டை விட 0.47 சதவீதம் மட்டுமே கூடுதலாகும். எனினும், நிறுவனத்தின் மொத்த வருவாய் 3.96 சதவீதம் உயா்ந்து, ரூ. 92,624 கோடியை எட்டியுள்ளது.

நிறுவனத்தின் எதிா்காலத் திட்டங்கள் குறித்துப் பேசிய விப்ரோ சிஇஓ ஸ்ரீனி பாலியா, ‘ஏ.ஐ. தொழில்நுட்பம் வாடிக்கையாளா்களின் முன்னுரிமைகளை மாற்றி வருகிறது. இதற்கு ஏற்ப விப்ரோ தன்னைத் தகவமைத்துக் கொண்டு வருகிறது. சிங்கப்பூரின் ஓலாம் குழுமத்துடனான எங்களின் புதிய ஒப்பந்தம், எதிா்கால வளா்ச்சியை உறுதிப்படுத்தும் முக்கிய மைல்கல்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.