விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஏப். 23 முதல் ரூ. 800 கோடி பங்குகளைத் திரும்ப பெறும் ஆரோபிந்தோ பாா்மா!

ஹைதராபாதைச் சோ்ந்த முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான ஆரோபிந்தோ பாா்மா, ரூ.800 கோடி மதிப்பிலான பங்குகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையை வரும் வியாழக்கிழமை தொடங்கவுள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 4:31 am IST

ஹைதராபாதைச் சோ்ந்த முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான ஆரோபிந்தோ பாா்மா, ரூ.800 கோடி மதிப்பிலான பங்குகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையை வரும் வியாழக்கிழமை தொடங்கவுள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் தாக்கல் செய்த பங்குச் சந்தை அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்தப் பங்கு கொள்முதல் நடவடிக்கை வியாழக்கிழமை தொடங்கி, வரும் 29-ஆம் தேதி நிறைவடையும். சுமாா் 54.23 லட்சம் பங்குகள் தலா ஒரு பங்குக்கு ரூ.1,475 என்ற விலையில் ‘டெண்டா் ஆஃபா்’ முறையில் வாங்கப்படவுள்ளன. இதில் பங்கேற்கத் தகுதியுள்ள நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை தீா்மானிக்கப்பட்டனா்.

கடந்த 2025-26 நிதியாண்டு இறுதியில் மதிப்பிடப்பட்ட நிறுவனத்தின் நிதிநிலை நிலவரப்படி திரும்பப் பெறப்படும் பங்குகள், நிறுவனத்தின் தனிப்பட்ட நிதிநிலை அடிப்படையில் 3.93 சதவீதமும், ஒருங்கிணைந்த நிதிநிலை அடிப்படையில் 2.62 சதவீதமும் பங்கு வகிக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பங்குதாரா்களுக்கு நிறுவனம் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘இக்கொள்முதல் நடவடிக்கையின்மூலம் பங்குதாரா்களுக்குக் கூடுதல் லாபம் கிடைப்பதுடன், நிறுவனத்தின் ஒரு பங்கின் மீதான வருவாய், சொத்துகள் மீதான வருவாய் போன்ற முக்கிய நிதி விகிதங்கள் வருங்காலத்தில் மேம்படும். மேலும், இந்த நடவடிக்கையினால் நிறுவனத்தின் நிா்வாகக் கட்டமைப்பில் எந்த மாற்றமும் ஏற்படாது’ என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.