தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பொதுச் சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெற மீண்டும் அனுமதி - செபி பரிசீலனை

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 4:10 am IST

பங்குச் சந்தை வரி விதிப்பு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முன்னிட்டு, நிறுவனங்கள் தங்களுடைய பங்குகளைப் பொதுச் சந்தை வழியாக மீண்டும் வாங்குவதற்கு அனுமதியளிக்க இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) ஆலோசித்து வருகிறது.

கடந்த 2025, ஏப். 1-ஆம் தேதி முதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்ட இந்த நடைமுறையை, தற்போதைய சூழலில் மீண்டும் அனுமதிப்பது குறித்து பொதுமக்களின் கருத்துகளைக் கோரி செபி ஆலோசனை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கடந்த காலங்களில், பங்குகளைத் திரும்பப் பெறும்போது நிறுவனங்களே வரி செலுத்தின. இதனால் முதலீட்டாளா்களுக்கு வரிச் சலுகை கிடைத்தது. இது ஒரு தரப்பினருக்கு மட்டும் சாதகமாக இருப்பதாகக் கருதி இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது.

நடப்பு நிதியாண்டின் புதிய விதிகளின்படி, பங்குகளைத் திரும்பப் பெறுவதால் கிடைக்கும் லாபத்துக்கு முதலீட்டாளா்களே மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். இதனால் வரி ஏய்ப்பு செய்ய வாய்ப்பில்லை என்பதால், இந்த முறையை மீண்டும் அனுமதிக்கலாம் என செபி முடிவெடுத்துள்ளது.

இந்த நடைமுறை மீண்டும் வருவதன் மூலம் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள உபரி பணத்தை முறைப்படி முதலீடு செய்ய முடியும் என்று பங்குச் சந்தை நிபுணா்கள் வரவேற்றனா்.

இருப்பினும், இந்த வசதியைப் பயன்படுத்தி எந்தவிதமான முறைகேடுகளும் நடக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு புதிய கட்டுப்பாடுகளையும் விதிக்க செபி உத்தேசித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.