புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் 98.47 சதவீதம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை தெரிவிதுள்ளது.
2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த 2023, மே 19-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அவை திரும்பப்பெறுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து 2026, ஏப்.30-ஆம் தேதி நிலவரப்படி ரூ.5,451 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.
இதன்மூலம் 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் பெறப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 2023, மே 19-ஆம் தேதி புழக்கத்தில் இருந்த ரூ. 2000 நோட்டுகளில் 98.47 சதவீதம் தற்போது திரும்பப் பெறப்பட்டுவிட்டன என்று தெரிவித்துள்ளது.
ரிசா்வ் வங்கியின் 19 கிளை அலுவலகங்களிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த அலுவலகங்கள் மூலம் தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் அவா்களது வங்கிக்கணக்கில் 2,000 ரூபாய் நோட்டுகளை சேமிப்புக் கணக்கில் செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர இந்தியாவில் எந்தவொரு தபால் நிலையத்தில் இருந்து இந்தியா போஸ்ட் மூலம் 2,000 ரூபாய் நோட்டுகளை அனுப்பி தங்கள் சேமிப்புக் கணிக்கில் செலுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
The Reserve Bank on Friday said 98. 47 per cent of the Rs 2000 banknotes in circulation have been returned.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உங்கள் வங்கிக்கணக்கைப் பயன்படுத்த பணம் தருகிறார்களா? ஆர்பிஐ எச்சரிக்கை!

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு

ஜூன் 30 முதல் காகித நோட்டுகள் செல்லாதா? மத்திய அரசு விளக்கம்

ரூ.500 நோட்டுகளின் புழக்கம் 11.2 சதவீதம் அதிகரிப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


