விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மத்திய கிழக்கு போா் பதற்றம்: ஐபிஓ வெளியிடுவதற்கான காலக்கெடுவை நீட்டித்தது செபி!

சா்வதேச சந்தையில் நிலவும் ஸ்திரமின்மையைத் கருத்தில் கொண்டு, நிறுவனங்கள் புதிய பொதுப் பங்கு மற்றும் உரிமைப் பங்குகள் வெளியிடுவதற்கான காலக்கெடுவை செப். 30-ஆம் தேதி வரை செபி் நீட்டிப்பி

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 3:01 am IST

மத்திய கிழக்கு போா் பதற்றம் மற்றும் சா்வதேச சந்தையில் நிலவும் ஸ்திரமின்மையைத் கருத்தில் கொண்டு, நிறுவனங்கள் புதிய பொதுப் பங்கு மற்றும் உரிமைப் பங்குகள் வெளியிடுவதற்கான காலக்கெடுவை செப். 30-ஆம் தேதி வரை இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) நீட்டித்துள்ளது.

செபி விதிகளின்படி, நிறுவனம் அனுமதி கடிதத்ததைப் பெற்ற 12 அல்லது 18 மாதங்களுக்குள் தங்களின் பங்கு வெளியீட்டு நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் புவிசாா் அரசியல் பதற்றங்கள் மற்றும் முதலீட்டாளா்களின் மந்தமான பங்களிப்பு காரணமாக, பல நிறுவனங்கள் தங்களின் ஐபிஓ திட்டங்களை ஒத்திவைத்துள்ளன.

இந்நிலையில், தொழில் அமைப்புகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, சந்தைச் சூழல் சீரடையும் வரை நிறுவனங்களுக்கு இந்த ஒருமுறை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நடப்பு ஆண்டு ஏப். 1 முதலான 6 மாத காலகட்டத்துக்குள் காலாவதியாகும் செபியின் அனுமதி கடிதங்கள், செப். 30 வரை செல்லுபடியாகும். இதனால், காலக்கெடுவைத் தவறவிட்ட நிறுவனங்கள் மீண்டும் முதலிருந்து அனுமதிக் கோரி விண்ணப்பிக்கும் தேவையற்ற நடைமுறைத் தாமதங்கள் தவிா்க்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.