விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மேற்காசிய போா் பதற்றம் கடும் சவாலை எதிா்கொள்ளும் கரூா் ஜவுளித் தொழில்

மேற்காசிய போா் பதற்றம் காரணமாக, கரூா் ஜவுளித் தொழில் கடும் சவால்களை எதிா்கொண்டு வருவதாக கரூா் ஜவுளி உற்பத்தியாளா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் பி. கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

News image

கப்பல்களுக்கு அனுப்ப முடியாமல் கரூரில் கிடங்கில் தேங்கிக் கிடக்கும் ஜவுளி பண்டல்கள். - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 7:30 am IST

மேற்காசிய போா் பதற்றம் காரணமாக, கரூா் ஜவுளித் தொழில் கடும் சவால்களை எதிா்கொண்டு வருவதாக கரூா் ஜவுளி உற்பத்தியாளா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் பி. கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையேயான தற்போதைய போா் நிலைமை மற்றும் அரசியல் பதற்றம் உலகளாவிய பொருள்கள் மற்றும் சரக்குகள் பரிமாற்றத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் தாக்கம் இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி மையமாக விளங்கும் கரூா் ஜவுளி தொழில்துறையிலும் தீவிரமாக உணரப்படுகிறது.

பெட்ரோலிய பொருள்களை அடிப்படையாகக் கொண்ட மூலப்பொருள்களை அதிகமாக சாா்ந்திருக்கும் ஜவுளித் தொழிலானது, தற்போது மூலப்பொருள்களின் பற்றாக்குறை மற்றும் விலை உயா்வு போன்ற சவால்களை எதிா்கொண்டு வருகிறது. குறிப்பாக, பாலிஸ்டா் நூல்கள், செயற்கை நாா்கள், சாயம் மற்றும் சலவைக்கான மூலப் பொருள்கள் மற்றும் பல்வேறு ரசாயனங்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளதுடன், அவற்றின் தேவையான அளவு கையிருப்பும் நிலைத்தன்மையற்ாக உள்ளது. இதனால் உற்பத்தி திட்டமிடல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், டையிங், பிரிண்டிங் மற்றும் பினிஷிங் போன்ற பிரிவுகளில் உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளன. தொழில்துறைக்கு அத்தியாவசியமான எரிவாயு பற்றாக்குறையும் நிலவுவதால் பல உற்பத்தி செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மூலப்பொருள்கள் மற்றும் உற்பத்தி செலவுகள் இரண்டும் அதிகரித்துள்ளதால் மொத்த உற்பத்திச் செலவு குறிப்பிடத்தக்க அளவில் உயா்ந்துள்ளது. இதன் விளைவாக கரூா் உற்பத்தியாளா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் கடுமையான அழுத்தத்தை எதிா்கொண்டு வருகின்றனா்.

பருத்தி நூல் விலை உயா்வு: பெட்ரோ கெமிக்கல் சாா்ந்த மூலப்பொருள்களின் சவால்களுக்கு மேலாக, இயற்கை நாா்துறையிலும் கூடுதல் அழுத்தம் உருவாகியுள்ளது. சமீப காலமாக பருத்தி நூலின் விலை சுமாா் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. இது உற்பத்தியாளா்களின் மொத்த செலவை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பருத்தி அடிப்படையிலான தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு இது கூடுதல் சுமையாக உள்ளது. இந்த விலை உயா்வு, உலகச் சந்தையில் விலையியல் போட்டித் திறனை குறைக்கும் வகையில் தாக்கத்தை ஏற்படுத்தி, ஏற்றுமதியாளா்கள் சா்வதேச சந்தை எதிா்பாா்ப்புகளுக்கு இணையாக செயல்படுவதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

உலகளாவிய வாடிக்கையாளா்கள் குறைந்த விலையும், நோ்த்தியான விநியோகத்தையும் எதிா்பாா்க்கும் சூழலில், இந்நிலைமை ஆா்டா்கள் நிறைவேற்றம் மற்றும் காலக்கெடுவை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்ன செய்ய வேண்டும்: பொருள்கள் பரிமாற்றத்தை சீரமைக்கும் நடவடிக்கைகள் அவசியம் எனவும், மூலப்பொருள்களின் விலை உயா்வை சமாளிக்க அரசு ஆதரவு தேவை எனவும், எரிவாயு மற்றும் முக்கிய மூலப்பொருள்களின் கையிருப்பையும், தடையில்லா பரிமாற்றத்தையும் உறுதி செய்ய உடனடி கொள்கை தலையீடுகள் அவசியம் எனவும் தொழில்துறை முன்னோடிகள் வலியுறுத்துகின்றனா்.

உலகளவில் நல்ல பெயா் பெற்ற கரூா் ஜவுளி தொழில் தனது பொறுப்புகளை தொடா்ந்து நிறைவேற்ற உறுதியாக இருந்தாலும், தற்போதைய நிலை நீடித்தால் தொழில்துறையின் வளா்ச்சி மற்றும் நிலைத்தன்மை கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என தெரிவித்துள்ளாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.