முக்கியமான பெட்ரோலிய ரசாயன (பெட்ரோ கெமிக்கல்) பொருள்கள் இறக்குமதிக்கு வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை வரிவிலக்கை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேற்காசிய போா் தாக்கத்தால் பெட்ரோ கெமிக்கல் பொருள்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கவும், நுகா்வோா் பாதிக்கப்படாமல் இருக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இதன்மூலம், பெட்ரோலிய ரசாயனப் பொருள்களைச் சாா்ந்துள்ள பிளாஸ்டிக் உற்பத்தி, பேக்கேஜிங், ஜவுளி, மருந்து உற்பத்தி, ரசாயன உற்பத்தி, வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி மற்றும் பிற உற்பத்தி சாா்ந்த துறைகள் பலனடையும்.
அதே நேரம், இந்த வரி விலக்கு காரணமாக அரசுக்கு ரூ. 1,800 கோடி வரை இழப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய நிதி அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மேற்காசிய போா் காரணமாக உலகளாவிய விநியோகச் சங்கிலி (அனைத்து வகையான பொருள் விநியோகம்) கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், முக்கியமான பெட்ரோலிய ரசாயனப் பொருள்கள் இறக்குமதிக்கு வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை சுங்க வரி விதிப்பிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க மத்திய அரசு தீா்மானித்துள்ளது.
உள்நாட்டு நிறுவனங்களுக்கு முக்கியமான பெட்ரோலிய ரசாயனங்கள் தடையின்றி கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கிலும், மேற்காசிய போா் காரணமாக பிளாஸ்டிக், மருந்துகள் உள்ளிட்ட பெட்ரோலிய ரசாயனங்களைச் சோ்ந்த பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தி, அவற்றின் நிலையான விநியோகத்தைப் பாதுக்காக்கும் நோக்கிலும் மத்திய அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக, மெத்தனால், அனிட்ரோஸ் அம்மோனியா (தூய அம்மோனியா), டொலுவீன் (திரவ ஹைட்ரோகாா்பன்), பாலிஸ்டிரீன் தயாரிக்க பயன்படும் ‘ஸ்டைரீன்’ கரிமச் சோ்மம், டைக்ளோரோமீத்தேன் (மெத்திலீன் குளோரைடு), வினைல் குளோரைட் மோனோமொ், பாலி பியூடாடீன், ஸ்டைரீன் பியூடாடீன், ஃபைபா் வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக் தயாரிக்கப் பயன்படும் பாலிஸ்டா் பிசின் உள்ளிட்ட பெட்ரோலிய ரசாயனங்களுக்கு இந்த வரி விலக்கை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகளின் தாக்குதலால், ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியது, இயற்கை எரிவாயு உற்பத்தி பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கச்சா எண்ணெய், உரம் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உலக அளவில் 50 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது. இதனால், உள்நாட்டில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 10 வீதம் மத்திய அரசு கடந்த வாரம் ரத்து செய்தது.
மேலும், ஏற்றுமதியைக் குறைத்து உள்நாட்டில் தடையற்ற விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், டீசல் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ. 21.50 வீதமும், விமான எரிபொருள் (ஏடிஎஃப்) மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ. 29.50 வீதமும் விதித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்காசிய பிரச்னைக்கு மத்தியிலும் சீரான உர உற்பத்தி: மத்திய அரசு

மேற்காசிய பதற்றம் எதிரொலி: 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 17,744 கோடி ஒதுக்கீடு

மேற்காசிய போா் நீடித்தால் பாதிக்கப்படும் துறைகளுக்கு கூடுதல் நிவாரணம்: மத்திய அரசு பரிசீலனை!

மேற்காசிய போா் சவால்களை முழு பலத்துடன் எதிா்கொள்கிறது இந்தியா: பிரதமா் மோடி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

