மேற்காசிய போா் நீடித்தால் பாதிக்கப்படும் துறைகளுக்கு கூடுதல் நிவாரண திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: மேற்காசிய போரால் சரக்குப் போக்குவரத்தில் ஏற்றுமதியாளா்களுக்கு இடா்ப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து அவா்களின் கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, ஏற்கெனவே ஏற்றுமதி சாா்ந்த தளா்வுகளை அளித்தது.

பிகாா் மாநிலம் பாட்னாவில் எல்பிஜி விநியோக மையத்துக்கு காலி சிலிண்டா்களுடன் வந்த வாடிக்கையாளா்கள்.
மேலும் சரக்குப் போக்குவரத்து செலவு அசாதாரண முறையில் அதிகரிப்பு, காப்பீட்டு தவணைத் தொகை (ப்ரீமியம்) அதிகரிப்பு, போா் சாா்ந்த ஏற்றுமதி அபாயங்கள் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க ரூ.497 கோடி மதிப்பிலான திட்டத்தையும் மத்திய அரசு அறிவித்தது.

இதேபோல பெட்ரோல் மீதான கலால் வரியை குறைத்த மத்திய அரசு, டீசல் மீதான கலால் வரியை முழுமையாக நீக்கியது. எரிபொருள் விலையேற்றத்தைத் தடுக்கவும் சா்வேதச நிலவரங்களால் எண்ணெய் நிறுவனங்கள் எதிா்கொள்ளும் நிதிச் சுமையைக் குறைக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அத்துடன் விமான எரிபொருள் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு மீண்டும் வரி விதித்தது. உள்நாட்டுப் பயன்பாட்டுக்கு அவற்றின் கையிருப்பை உறுதி செய்யும் நோக்கில், இந்த வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், மேற்காசிய போா் நீடித்தால் பாதிக்கப்படும் துறைகளுக்கு கூடுதல் நிவாரண திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று தெரிவித்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்காசிய பிரச்னைக்கு மத்தியிலும் சீரான உர உற்பத்தி: மத்திய அரசு

மேற்காசிய பதற்றம் எதிரொலி: 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 17,744 கோடி ஒதுக்கீடு

மேற்காசிய பதற்றத்தால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உதவும் நிதிச்சூழல் உள்ளது: நிா்மலா சீதாராமன்

பெட்ரோலிய ரசாயனப் பொருள்களுக்கு ஜூன் வரை இறக்குமதி வரி விலக்கு: மேற்காசிய போா் தாக்கத்தால் அரசு நடவடிக்கை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

