புதுதில்லி: டாபே நிறுவனம், கடந்த நிதியாண்டில் விற்பனையான 1,74,785 டிராக்டர்களுடன் ஒப்பிடுகையில், 2025-26 நிதியாண்டில் மொத்தம் 2,14,951 டிராக்டரை விற்பனை செய்து, 23% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்தது.
மார்ச் 2026ல், 37.4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்ததன் மூலம், நிதியாண்டை சிறப்பாக நிறைவு செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்தது.
நிறுவனத்தின் 'ஃபெர்குசன்' மற்றும் 'ஐஷர்' ஆகிய இரண்டு டிராக்டர்கள் அதிகபட்ச விற்பனையைப் பதிவு செய்ததன் மூலம், டிராக்டர் வரலாற்றிலேயே மிக உயர்ந்த உள்நாட்டு விற்பனை அளவை எட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்தது.
செயல்பாடுகள் குறித்துப் பேசிய நிறுவனத்தின் துணைத் தலைவர் திருமதி லக்ஷ்மி வேணு, டிராக்டர் சந்தைக்கும், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கும் இது ஒரு சாதகமான ஆண்டாக அமைந்தது. சாதகமான பருவமழை, ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதற்கான அரசின் நடவடிக்கையும் விவசாயத் துறைக்குக் குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளித்துள்ளது.
இந்த ஆண்டு, சிறு விவசாயிகளுக்கு இயந்திரமயமாக்கல் வசதி கிடைத்திருப்பது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை பிரதிபலிக்கிறது. அதை வேளையில் விவசாயிகள் பலர் முதன்முறையாக இந்த இயந்திரமயமாக்கல் சூழலுக்குள் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், இது நாடு முழுவதும் விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்துவதிலும், விவசாயிகளின் வருமானத்தை வலுப்படுத்துவதிலும் நீண்ட கால அடிப்படையில் பெரும் பங்காற்றும்.
இந்த துறையில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களின் மாறிவரும் விருப்பங்களின் மீது, நாங்கள் மிகுந்த கவனத்தைச் செலுத்தி வருகிறோம், எங்களின் இந்தக் கவனமே, இந்த ஆண்டின் சந்தையில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட உதவியுள்ளது.
தற்போதைய அரசியல் பதற்றங்கள் மற்றும் போரினால் ஏற்படும் விநியோகத் தடைகள் ஆகியவற்றால் உருவாகும் உலகளாவிய நிச்சயமற்ற நிலை மற்றும் பணவீக்கம் உள்ளிட்டவை விவசாயிகளை தொடர்ந்து பாதித்து வந்தாலும், இந்திய விவசாயத்தின் அடிப்படை அம்சங்கள் தொடர்ந்து வலுவாகவே இருப்பதாக நிறுவனம் தெரிவித்தது.
Summary
Tractors and Farm Equipment Ltd on Friday reported a 23 per cent rise in total tractor sales with a record 2,14,951 units.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரெனால்ட் இந்தியா ஏப்ரல் மாத விற்பனை இரட்டிப்பு!

ராயல் என்ஃபீல்டு விற்பனை 31 சதவீதம் அதிகரிப்பு!
ரூ.47 லட்சம் முதலீட்டு மோசடி: 3 போ் கைது

கடந்த 2025-26 நிதியாண்டில் டாஃபே விற்பனை 23% வளா்ச்சி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


