புதுதில்லி: ஐஷர் மோட்டார்ஸ் குழுமத்தின் ஒரு பகுதியான ராயல் என்ஃபீல்டு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 86,559 வாகனங்களை விற்பனை செய்த நிலையில், ஏப்ரல் 2026ல் அதன் மொத்த விற்பனை 31 சதவீதம் அதிகரித்து 1,13,164 வாகனங்களாக இருப்பதாக தெரிவித்தது.
உள்நாட்டு விற்பனை ஏப்ரல் 2025ல் 76,002 வாகனங்களாக இருந்த நிலையில், இது தற்போது 37 சதவீதம் அதிகரித்து 1,04,129 வாகனங்களாக உள்ளது. இருப்பினும், ஏப்ரல் 2025ல் 10,557 வாகனங்களாக இருந்த ஏற்றுமதி, கடந்த மாதம் 14 சதவீதம் குறைந்து 9,035 வாகனங்களாக இருப்பதாக தெரிவித்தது.
ஏப்ரல் 2026 எங்களுக்கு ஒரு சிறப்பான மாதமாக அமைந்தது. பொதுமக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்ற 'ஃப்ளையிங் ஃப்ளீ சி6' (Flying Flea C6) அறிமுகத்துடன், மின்சார வாகனத் துறையில், நாங்கள் முதல் அடியை எடுத்து வைத்துள்ளோம், என்றார் ஐஷர் மோட்டார்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநரும், ராயல் என்ஃபீல்ட் தலைமைச் செயல் அதிகாரியுமான பி. கோவிந்தராஜன்.
சர்வதேச அளவில், வெற்றிகரமான புதிய அறிமுகங்கள், தொழில்துறை அங்கீகாரங்கள் மற்றும் வளர்ந்து வரும் வாகன ஓட்டுநர் சமூகம் ஆகியவற்றால் உந்தப்பட்டு, எங்களின் முக்கிய சந்தை தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுவதாக நிறுவனம் தெரிவித்தது.
Summary
Royal Enfield reported a 31 per cent rise in total sales at 1,13,164 units in April 2026.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்டு ரூ.2,200 கோடி முதலீடு: தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்

ரெனால்ட் இந்தியா ஏப்ரல் மாத விற்பனை இரட்டிப்பு!

சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியாவின் மொத்த விற்பனை 4% உயர்வு!

2026ஆம் நிதியாண்டில் இந்தியாவில் மொத்த வாகன விற்பனை 2.83 கோடி: சியாம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


