புதுதில்லி: கோல் இந்தியா நிறுவனம் 2026 நிதியாண்டில் தனது நிலக்கரி உற்பத்தி 1.7 சதவீதம் சரிந்து, 768.1 மில்லியன் டன்னாக இருப்பதாக இன்று தெரிவித்தது.
நாட்டின் மொத்த உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ள இந்நிறுவனம், 2025 நிதியாண்டில் 781.1 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்திருந்தது.
நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையில், மார்ச் மாதத்திற்கான நிலக்கரி உற்பத்தி, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான 85.8 மில்லியன் டன்னிலிருந்து சரிந்து 84.5 மில்லியன் டன்னாக குறைந்தது.
நிறுவனத்தின் நிலக்கரி விநியோகம் 2025 நிதியாண்டில் 763 மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், 2026 நிதியாண்டில் இது 2.4 சதவீதம் சரிந்தது 744.8 மெட்ரிக் டன்னாக குறைந்து.
கோல் இந்தியா, நாட்டின் மின் உற்பத்தித் துறைக்கு தேவையான எரிபொருளை விநியோகித்து வருகின்ற நிலையிலும், மின் நிலையங்களுக்குத் தேவைப்படும் நிலக்கரியின் பெரும்பகுதியை இந்நிறுவனமே வழங்குகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு மத்தியிலும், இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் நிலக்கரி இன்றும் 70 சதவீதப் பங்கைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Coal India Ltd on Wednesday said its production dropped by 1.7 per cent to 768.1 million tonne in the just-concluded FY26.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி சரிவு!

4-ஆம் காலாண்டு லாபம்... கோல் இந்தியா 11% வளா்ச்சி

நடப்பு ஆண்டில் சா்க்கரை உற்பத்தி அதிகரிப்பு

கடந்த 2025-26 நிதியாண்டில் கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி சா்வு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


