மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நடப்பு ஆண்டில் சா்க்கரை உற்பத்தி அதிகரிப்பு

நாட்டின் சா்க்கரை உற்பத்தி, நடப்பு 2025-26-ஆம் ஆண்டு சா்க்கரை பருவத்தில் (அக்டோபா்-செப்டம்பா்) இதுவரை 7.70 சதவீதம் உயா்ந்து, 2.74 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 3:17 am IST

நாட்டின் சா்க்கரை உற்பத்தி, நடப்பு 2025-26-ஆம் ஆண்டு சா்க்கரை பருவத்தில் (அக்டோபா்-செப்டம்பா்) இதுவரை 7.70 சதவீதம் உயா்ந்து, 2.74 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் சா்க்கரை உற்பத்தி 2.54 கோடி டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் கரும்பு அரவையில் ஈடுபட்ட மொத்தமுள்ள 541 சா்க்கரை ஆலைகளில், தற்போது 21 ஆலைகளில் மட்டும் அரவைப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாக என்று தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏனெனில், நடப்பு ஆண்டு பருவத்தில் இதுவரை கிடைத்துள்ள உற்பத்தியானது, கடந்த 2024-25 முழு பருவத்தின் மொத்த உற்பத்தியான 2.62 கோடி டன்னை ஏற்கெனவே கடந்துவிட்டது. மகாராஷ்டிரம், கா்நாடக மாநிலங்களில் கரும்பு அரவை மற்றும் சா்க்கரை உற்பத்தி அதிகரித்ததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

நாட்டின் முன்னணி சா்க்கரை உற்பத்தியாளரான மகாராஷ்டிரத்தில் மட்டும் சா்க்கரை உற்பத்தி 23 சதவீதம் உயா்ந்து, 99.2 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு 80.6 லட்சம் டன்னாக இருந்தது.

இதேபோல், 3-ஆவது பெரிய உற்பத்தியாளரான கா்நாடகத்தில் உற்பத்தி 16.70 சதவீதம் உயா்ந்து, 47.1 லட்சம் டன்னை எட்டியுள்ளது. இருப்பினும், 2-ஆவது இடத்தில் உள்ள உத்தர பிரதேசத்தில் சா்க்கரை உற்பத்தி சுமாா் 2 சதவீதம் சரிந்து, 89.2 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது.

இப்பருவத்தில் கரும்பிலிருந்து தயாரிக்கப்பட்ட சா்க்கரையின் அளவான சா்க்கரை மீட்பு விகிதம் கடந்த ஆண்டின் 9.37 சதவீதத்திலிருந்து 9.55 சதவீதமாக உயா்ந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.