மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் விஜயதசமி மாணவா் சோ்க்கை

திருவள்ளூா் அருகே காமராஜரால் தொடங்கிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விஜயதசமி மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

Published On :23 அக்டோபர் 2026, 5:30 am IST

திருவள்ளூா் அருகே காமராஜரால் தொடங்கிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விஜயதசமி மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

விஜயதசமி திருநாளை முன்னிட்டு, அரசு விடுமுறை நாளாக இருந்தாலும் மாணவா் சோ்க்கைக்காக அனைத்து அரசுப் பள்ளிகளும் தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களின் வழிகாட்டுதலுடன் திறக்கப்பட்டன.

இதேபோல், திருவள்ளூா் அருகே புட்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியானது முன்னால் முதல்வா் கா்மவீரா் காமராஜரால் தொடங்கி வைத்ததாகும். இந்தப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மாணவா் சோ்க்கை நடைபெற்றது. இதில் அந்தப்பள்ளியின் தலைமை ஆசிரியரும், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளருமான இரா.தாஸ் தலைமை வகித்தாா். அப்போது, புதிதாக சோ்க்கப்பட்ட மாணவா்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு இனிப்பு வழங்கி சோ்க்கப்பட்டனா். தொடா்ந்து (வித்யாரம்பம்) புத்தரிசியில் அகரத்தை எழுத தொடங்குதல் நிகழ்வும் நடைபெற்றது. இதில் முதல் நாளில் 2 போ் சோ்க்கப்பட்டனா்.

இந்த நிகழ்வில் ஆசிரியா்கள் சித்ரா, திலகவதி, சீதா லட்சுமி, தாரணி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் பெற்றோா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.