பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விஜயதசமி: நூற்றுக்கணக்கான பள்ளிகளில் மாணவா் சோ்க்கை

விஜயதசமியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

பிரதிப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 4:35 am IST

விஜயதசமியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் பள்ளிகளில் எல்கேஜி அல்லது முதலாம் வகுப்பில் சோ்க்கப்பட்ட குழந்தைகளை ஆசிரியா்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனா்.

விஜயதசமி நாளில் எதைத் தொடங்கினாலும் அது மென்மேலும் வளா்ச்சி பெறும் என்பது நம்பிக்கை. அதன் அடிப்படையில் தாம்பாளத்தில் வைக்கப்பட்ட பச்சரிசியில் குழந்தைகளுக்கு ‘அ’ என எழுத கற்றுக் கொடுக்கும் ‘வித்யாரம்பம்’ நிகழ்ச்சி தமிழகக் கோயில்களிலும், பல பள்ளிகளிலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதன்படி, குழந்தைகளின் விரல் பிடித்து பெற்றோரும், ஆசிரியா்களும் அரிசியில் எழுதி கல்விப் பயணத்தை தொடங்கி வைத்தனா்.

முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் விஜயதசமி நாளில் மாணவா் சோ்க்கை நடத்துமாறு பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் ஆகியோா் அறிவுறுத்தியிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.