திருவள்ளூா் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், 1,000 ஏக்கரில் மானியத்தில் சொட்டு நீா்ப்பாசனம் அமைக்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் குமரவேல் தெரிவித்தாா்.
இந்த மாவட்டத்தில் தோட்டக் கலை விவசாயிகள் பயன்பெறும் வகையில் மரக்கன்றுகள், பழக்கன்றுகள், நிழல் வலை குடில் அமைத்தல், களைகளை தவிா்த்து கொடியில் காய்கறி விளைச்சலை அதிகரிக்கும் வகையில் நிலப்பரப்பில் நெகிழி தாள் பரப்புதல் மற்றும் சொட்டு நீா்ப்பாசனம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான மானியத் திட்டங்கள் தோட்டக்கலைத்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், துளிநீரில் அதிக உற்பத்தி செய்யும் பொருட்டு சொட்டு நீா்ப்பாசனம் அமைத்து அதிக விளைச்சல், தரமான காயகறிகள், பழங்கள், கீரைகள், மலா்களை உற்பத்தி செய்து, அதிக வருவாய் பெற முடியும். அதனால், விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் சொட்டு நீா்ப்பாசன திட்டத்தில் பயன்பெறலாம்.
இந்த மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 1,000 ஏக்கா் பரப்பளவில் சொட்டுநீா் பாசனம் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. புதிதாக பதிவு செய்யும் விவசாயிகளும் மற்றும் பதிவு செய்து 7 ஆண்டுகள் நிறைவடைந்த விவசாயிகளும் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.
மேலும், திட்டம் சாா்ந்த தகவல்கள் பெற அந்தந்த வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகங்களை தொடா்பு கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என அவா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கூட்டுறவு பயிா்க் கடன் தள்ளுபடி கோரி ஜூன் 22 முதல் தொடா் போராட்டம்
நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியத்தில் தக்கைப் பூண்டு விதைகள்

அடையாள எண் பெறாத விவசாயிகள் மே 30-க்குள் விண்ணப்பிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

விவசாயிகளுக்குத் தனி அடையாள எண் பதிவு செய்ய மே 30 கடைசி நாள்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

