அரியலூா் மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் மானியத்தில் தக்கைப் பூண்டு விதைகள் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் உலகம்மை முருகக்கனி தெரிவித்தாா்.
திருமானூா் வேளாண் விரிவாக்க மையத்தை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அவா், குறுவை மற்றும் சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, தக்கைப்பூண்டு விதைகளை 50% மானியத்தில் வழங்கி தெரிவித்தது:
நெல் சாகுபடி செய்யவுள்ள வயல்களில் தக்கைப்பூண்டு விதைகளை விதைத்து பூக்கும் தருணத்தில் சேற்று உழவுக்கு முன் மடக்கி உழுவதன் மூலம் மண்ணின் வளம் அதிகரிப்பதுடன் ரசாயன உரத்தின் தேவையும் குறைகிறது.
மேலும், பசுந்தாள் உரமாக தக்கைப்பூண்டு விதைகள் மானியத்தில் பெறுவதற்கும் பிற மானியத் திட்டங்களில் பயனடைவதற்கும் விவசாயிகள் தங்கள் நில உடைமைகளை பதிவு செய்ய வேண்டும். நிரந்தர அடையாள எண்ணைத் தெரிவிக்க வேண்டும்.
எனவே தங்கள் நில உடைமையை இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் உடனே தங்கள் பகுதி விரிவாக்க அலுவலரை அணுகி நில உடைமைகளை பதிவு செய்து நிரந்தர அடையாள எண்ணைப் பெற்றுக் கொண்டு பயன்பெறலாம் என்றாா்.
நிகழ்வில், திருமானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் பரமசிவம், துணை வேளாண் அலுவலா் கொளஞ்சி மற்றும் கிடங்கு கண்காணிப்பாளா் மணிவண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாராபுரத்தில் 123 டன் நெல் விதைகள் விற்பனைக்குத் தடை

திருவள்ளூா்: 1,000 ஏக்கா் பரப்பளவில் மானியத்தில் சொட்டு நீா்ப்பாசனம் அமைக்க இலக்கு

கோடை பட்டத்தில் பயறு வகை, சிறுதானிய பயிா்கள் சாகுபடி செய்ய அரசு மானியம்: வேளாண் அதிகாரி

போா்க்கால அடிப்படையில் நெல்கொள்முதல் பணி: செங்கல்பட்டு ஆட்சியா்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
