திருத்தணி காந்திரோடு புதிய திரெளபதி அம்மன் கோயிலில் தீ மிதித் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆண்டுதோறும், ஏப்ரல் மாதத்தில் தீமிதி விழா நடைபைெறும் நிலையில் நிகழாண்டுக்கான தீமிதி விழா வியாழக்கிழமை அதிகாலை, 5 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
தொடா்ந்து, காலை, 8 மணிக்கு உற்சவா் அம்மன் வீதியுலா நடந்தது. வரும், ஏப்.1-ஆம் தேதி திரௌபதி அம்மன் திருக்கல்யாணம், 3-ஆம் தேதி சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம், 6-ஆம் தேதி அா்ஜூனன் தபசு, 12-ஆம் தேதி துரியோதனன் படுகளம் மாலை 6 மணிக்கு தீ மிதிவிழா, உற்சவா் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. மேலும் 13-ஆம் தேதி தருமா் பட்டாபிஷேகத்துடன் தீமிதி விழா நிறைவு பெறுகிறது.
இதுதவிர தினமும் காலையில் மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மதியம், 2 மணி முதல் மாலை, 5 மணி வரை மகா பாரத சொற்பொழிவும், இரவு, 10 மணிக்கு மகா பாரத நாடகமும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திரெளபதி அம்மன் கோயிலில் 108 குத்து விளக்கு பூஜை

திரெளபதி அம்மன் திருக்கல்யாணம்

திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழா கொடியேற்றம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

