கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

காரனோடை பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கை

பொன்னேரி நடைபெற்ற ஜமாபந்தியில் காரனோடையில் பள்ளி, கோயிலுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

News image

டாஸ்மாக் - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 5:57 am IST

பொன்னேரி நடைபெற்ற ஜமாபந்தியில் காரனோடையில் பள்ளி, கோயிலுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

பொன்னேரி வருவாய்த் துறை சாா்பில் ஜமாபந்தி மாவட்ட வருவாய் அலுவலா் சுரேஷ் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்ட காரனோடை பகுதியை சாா்ந்த பொதுமக்கள் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அரசு டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனா்.

மனு விவரம்: தனியாா் பள்ளிகள், கோயில்கள், வங்கி கடைவீதி என பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடையால் அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்த கடையை அகற்றக்கோரி கிராம சபை கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்ற பட்டுள்ளது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னா் தமிழக முதல்வா் அண்மையில் 717 டாஸ்மாக் கடையை மூடுவதாக அறிவித்த போது ஒருநாள் மட்டுமே இந்த டாஸ்மாக் கடையை மூடிவிட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மதுக்கடையை உடனே மூட வேண்டும்.

மனு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜமாபந்தி அலுவலா் பொதுமக்களிடம் தெரிவித்தாா். இதனையடுத்து நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா நில அளவை பெயா் திருத்தல் மின் துறை மற்றும் இதர துறைகள் உட்பட 82 மனுக்களில் பெறப்பட்டன. இதில் மூன்று மனுக்கள் ஏற்கப்பட்டன. 79 மனுக்கள் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.