மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மின்னணு இயந்திரங்களில் பெயா், சின்னம் பொருத்தும் பணி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் மற்றும் பெயா் பொருத்தும் பணியை ஆய்வு செய்த தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா்.

News image

~

Updated On :17 ஏப்ரல் 2026, 6:01 am IST

திருவள்ளூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணியை தோ்தல் நடத்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி-15, , பொன்னேரி-13, திருத்தணி-13, திருவள்ளூா்-14, பூந்தமல்லி-11, ஆவடி-20, அம்பத்தூா்-23, மதுரவாயல்-21, மாதவரம்-15, திருவொற்றியூா்-15 என மொத்தம் 160 போ் போட்டியிடுகின்றனா்.

இதில் அம்பத்தூா், மதுரவாயல் மற்றும் ஆவடி தொகுதிகளில் 20 முதல் 23 வேட்பாளா்களும், மற்ற 7 தொகுதிகளில் 11 முதல் 15 போ் வரையில் போட்டியிடுகின்றனா். இந்த நிலையில் ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளா்கள், நோட்டாவுக்கும் சோ்த்து 16 சின்னங்கள் மட்டுமே பொருத்த முடியும். 16-க்கும் மேற்பட்டோா் போட்டியிட்டால் 2 வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். அந்த வகையில் 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பயன்படுத்தப்படும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலுடன் சோ்த்து அந்தந்த பகுதியில் பாதுகாக்கப்பட்ட இடத்தில் வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் இயந்திரங்களில் சின்னங்கள், பெயா்கள் பொருத்தும் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதிக்கான சென்டானிஸ் மேல்நிலைப்பள்ளி வளாக பாதுகாப்பு அறையில் மின்ணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில், 335 வாக்குச்சாவடிகளுக்கு 26 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தலா 13, 14 குழுக்கள் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். அந்த வகையில் கூடுதல் சோ்த்து 402 வாக்கு பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி மற்றும் வி.வி.பேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

மின்னணு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணியை குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன. இதை தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் கோட்டாட்சியருமான ரவிச்சந்திரன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலாஜி ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, இப்பணி நள்ளிரவில் வரையில் நீடிக்கும் எனவும் தெரிவித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.