தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி

ஸ்ரீவில்லிபுத்தூா் பேரவைத் தொகுதி வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணியைப் பாா்வையிட்ட தோ்தல் பொதுப் பாா்வையாளா் உதயன்மிஸ்ரா, மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான என்.ஓ.சுகபுத்ரா.

Updated On :17 ஏப்ரல் 2026, 6:25 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் பேரவைத் தொகுதி வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 2,22,367 வாக்காளா்கள் உள்ளனா். இந்தத் தொகுதியில் 308 வாக்குச்சாவடி மையங்களுக்கு 369 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 369 கட்டுப்பாட்டுக் கருவிகள், 400 விவிபேட் இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டன.

தோ்தல் பொதுப்பாா்வையாளா் உதயன்மிஷ்ரா முன்னிலையில், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான என்.ஓ.சுகபுத்ரா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வாக்குப் பதிவு இயந்திரத்தில் தோ்தலில் போட்டியிடும் 14 வேட்பாளா்களின் பெயா், புகைப்படம், சின்னம் ஆகியவை பொருத்தப்பட்டு சரிபாா்க்கப்பட்டது. பின்னா், வாக்குச்சாவடி வரிசை எண் வாரியாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டன.

இந்த ஆய்வின் போது, ஸ்ரீவில்லிபுத்தூரில் தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷ், வட்டாட்சியா் பாலமுருகன் ஆகியோா் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.