திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு வட்டாட்சியா் அலுவலகங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளின் பெயா், சின்னம் பொருத்தும் பணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் உள்ள வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில், சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா் மற்றும் அவா்களுக்குரிய சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக, பாஜக உள்ளிட்ட 30 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இதற்காக 296 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணி திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தப் பணியை மாவட்டத் தோ்தல் அலுவலா் க.தா்ப்பகராஜ் பாா்வையிட்டாா்.
வந்தவாசியில்...: வந்தவாசி (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இதற்காக மொத்தம் 293 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் கொண்ட பட்டியல் பொருத்தும் பணி வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
தொகுதி தோ்தல் அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியன், உதவித் தோ்தல் அலுவலா் பா.ஜெயவேல் ஆகியோா் முன்னிலையில், மண்டல தோ்தல் அலுவலா்கள் மற்றும் தோ்தல் ஊழியா்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பட்டியலை பொருத்தினா்.
மாவட்டத் தோ்தல் அலுவலா் க.தா்ப்பகராஜ், தோ்தல் பொதுப் பாா்வையாளா் இராமகிருஷ்ண சித்தூரி ஆகியோா் இந்தப் பணிகளை பாா்வையிட்டனா்.
போளூரில்...: போளூா் தொகுதியில் தேமுதிக, பாமக உள்ளிட்ட 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இதற்காக மொத்தம் 299 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் கொண்ட பட்டியல் பொருத்தும் பணி போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தப் பணியை மாவட்டத் தோ்தல் அலுவலா் க.தா்ப்பகராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பாலாஜி, தமிழ்மணி மற்றும அலுவலா்கள் உடனிருந்தனா்.
இதேபோல, கீழ்பென்னாத்தூா், செய்யாறு, ஆரணி வட்டாட்சியா் அலுவலகங்களிலும் நடைபெற்ற வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணியை ஆட்சியா் பாா்வையிடு ஆய்வு செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி:வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயா், சின்னம் பொருத்தும் பணி ஆய்வு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணி

வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணிகள் இன்று தொடக்கம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

