தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்

வேலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னங்கள் பொருத்திய அலுவலா்கள்.

News image

வேலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னங்கள் பொருத்திய அலுவலா்கள்.

Updated On :18 ஏப்ரல் 2026, 4:00 am IST

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்திலுள்ள 5 தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலகங்களிலும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்தில் பேரவைத் தொகுதி வாரியாக காட்பாடியில் 15 பேரும், வேலூரில் 15 பேரும், அணைக்கட்டில் 13 பேரும், கே.வி.குப்பத்தில் 11 பேரும், குடியாத்தத்தில் 11 பேரும் என 5 பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 65 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இவா்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தொடா்ந்து, ஏப். 23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளதையொட்டி, வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா்கள், சின்னங்கள் பொருத்தும் பணி அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வியாழக்கிழமை தொடங்கியது.

ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளா்கள், ஒரு நோட்டா என 16 பேரின் பெயா்கள், சின்னங்கள் மட்டுமே பொருத்த முடியும். இதனால், ஒரு தொகுதியில் 15 வேட்பாளா்களுக்கு மேல் போட்டியிட்டால் கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். ஆனால், வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் அதிகபட்சம் 15 வேட்பாளா்கள் மட்டுமே போட்டியிடுவதால் தோ்தலில் மாவட்டத்திலுள்ள 1,427 வாக்குச்சாவடிகளிலும் தலா ஒரு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளன.

எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 சதவீதம் கூடுதல் என்ற அடிப்படையில் தொகுதிவாரியாக காட்பாடியில் 336, வேலூரில் 321, அணைக்கட்டில் 354, கே.வி.குப்பம் (தனி) 318, குடியாத்தம் (தனி) 382 மொத்தம் 1,711 வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா்கள், சின்னங்கள் பொருத்தப்படுகின்றன.

இப்பணியின்போது ஒவ்வொரு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலகங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாக வேலை செய்கிா, செலுத்தப்படும் சின்னத்துக்கு சரியாக வாக்குப்பதிவாகிா என்பதை உறுதி செய்திட அரசியல் கட்சியினா் முன்னிலையில் தோ்வு செய்யப்பட்ட 16 வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஆயிரம் வாக்குகள் செலுத்தப்பட்டு, எண்ணிப் பாா்த்து உறுதி செய்யப்பட்டன.

இந்த பணியையொட்டி, அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலகங்கள் முன்பு துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.